இலங்கையில் மற்றுமோரு பேருந்து விபத்து - 8 பேர் வைத்தியசாலையில் ..!

இலங்கையில் மற்றுமோரு பேருந்து விபத்து - 8 பேர் வைத்தியசாலையில்..!

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 20 பேர் பயணித்துள்ளனர், அவர்களில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGallery