முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்..!

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்..!

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட வானிலை முன்னறிவித்தலின் படி,

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலைப்பொழுதில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உண்டு.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல் | Weather Thunder Lightning

அநுராதபுரம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மாலைப்பொழுதில் இடியுடன் கூடிய மழை பெய்யக்க கூடும். கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யக்க கூடும்.

நுவரேலியா, இரத்தினபுரி ஆகிய இடங்களில் அடிக்கடி மழை பெய்யலாம்.கண்டியில் அடிக்கடி மழை பெய்யக் கூடும். திருகோணமலையில் சீரான வானிலை காணப்படும் என முன்னறிவிக்கப் பட்டுள்ளது.