காவல்துறை அதிரடி - மூடப்படும் மசாஜ் நிலையங்கள்..!
கடுவெல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பெண்களை பணத்திற்கு விற்கும் இடங்கள் உட்பட அனைத்து சட்டவிரோத மசாஜ் நிலையங்களையும் மூடுவதற்கு கடுவெல காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்த 13 நிலையங்களின் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் காவல்துறையினரும் கடுவெல மாநகர சபை உத்தியோகத்தர்களும் ஈடுபட்டுள்ளதுடன், இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக கடுவெல காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இதன்படி, கடுவெல பிரதேசத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்த அனைத்து நிலையங்களின் பெயர் பலகைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து காட்சிப் பொருட்களையும் கடுவெல காவல்துறையினர் மற்றும் கடுவெல மாநகர சபை அதிகாரிகள் இணைந்து கடந்த (9ம் திகதி) அகற்றினர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் யோசனைக்கு அமைய ஏனைய சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டதாக கடுவெல காவல் நிலைய பொறுப்பதிகாரி கன் வீரசிங்க தேஷ்பந்து தென்னகோன்தெரிவித்தார்.
சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பிரதேசத்தின் அனைத்து மதத் தலைவர்களும் மக்களும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.