யாழில் தவறான முடிவினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு..!

யாழில் தவறான முடிவினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று தவறான முடிவினால் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் (வயது 23) வயதுடைய இளம் குடும்பப்பெண்ணே வீட்டில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக அரலி விதையை அரைத்துக் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.