யாழில் கொடூரம்: குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கு
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (22-06-2026) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அயல்வீடுகளைச் சேர்ந்த இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருவர் மற்றையவர் மீது கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இது குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.