மன்னாரில் 9 கடற்றொழிலாளர்கள் கைது..!

மன்னாரில் 9 கடற்றொழிலாளர்கள் கைது..!

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் துணையுடன் கடற்பரப்பில் கள ஆய்வில் ஈடுபட்ட வேளையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை (13) அதிகாலை மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னாரில் 9 கடற்றொழிலாளர்கள் கைது (PHOTOS) | Fisher Man Arrested In Mannar

மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் கடற்பரப்பில் திடீரென கள நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னாரில் 9 கடற்றொழிலாளர்கள் கைது (PHOTOS) | Fisher Man Arrested In Mannar

இதன்போது மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் மன்னார் உப்புக்குளம்,பள்ளிமுனையைச் சேர்ந்த தலா மூன்று கடற்றொழிலாளர்கள் கொண்ட மூன்று படகுகளில் 9 கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.