சிறுநீரக சத்திரசிகிச்சையில் திடீரென உயிரிழந்த குழந்தை! சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ள கடும் நடவடிக்கை.

சிறுநீரக சத்திரசிகிச்சையில் திடீரென உயிரிழந்த குழந்தை! சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ள கடும் நடவடிக்கை.

கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தையொன்றுஉ யிரிழந்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை நீக்குவதற்கு சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுநீரக சத்திரசிகிச்சையில் திடீரென உயிரிழந்த குழந்தை! சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ள கடும் நடவடிக்கை | Sudden Infant Death After Kidney Surgeryசிறுநீரகம் தொடர்பான சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதும் 03 மாத வயதுடைய ஆண் குழந்தை நேற்று (27) உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில், இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.