மகனைக் கத்தியால் குத்திய மிலேச்சத்தனமான தந்தை!

மகனைக் கத்தியால் குத்திய மிலேச்சத்தனமான தந்தை!

பொரலுவெவ பிரதேசத்தில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவன்,  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மகனைக் கத்தியால் குத்திய மிலேச்சத்தனமான தந்தை! | Father Stabbed His Son

இச்சம்பவம் நேற்று (28) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபரான தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபேய்கனே காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.