கொழும்பில் சோகம்: வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபமாக பலி.

கொழும்பில் சோகம்: வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபமாக பலி.

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்று (28.07.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் சோகம்: வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபமாக பலி | Colombo Kaduvela Accident 2 Kill

இந்தக் விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற 48 வயதுடைய தந்தையும், அதில் பயணித்த 22 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தனது மகளை வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் தந்தை அழைத்துச் சென்றபோதே விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.