மனநல மருத்துவமனையில் தொடரும் மரணங்கள் சுகாதார ஊழியர்கள் கைது.
முல்லேரியாவிலுள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமுனைக் கோளாறால் (bipolar disorder) பாதிக்கப்பட்ட குறித்த நோயாளியை சுகாதாரப் பணியாளர்கள் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கு முன்னரும், 48 வயதான நோயாளியின் மரணம் தொடர்பாக வேறு இரண்டு உதவி சுகாதார ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.