இரு இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து மரணம்.

இரு இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து மரணம்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பினால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (28) காலை புறப்படத் தயாராகியுள்ளது.

இந்த விமானத்தில் பயணிக்க வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவகஜன் லிட்டி (43) என்ற பெண், பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இரு இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து மரணம் | Chennai Airport Two Die Sri Lankan Peoples

இதனை தொடர்ந்து உடனடியாக விமான நிலைய மருத்துவக்குழுவினர் வருகை தந்து பரிசோதனை செய்துள்ளதுடன், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவர் தனது மனைவியுடன் பிசினஸ் விசாவில் சென்னைக்கு சென்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

விமான நிலைய மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்ததில் அவரும் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இரு இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து மரணம் | Chennai Airport Two Die Sri Lankan Peoples

இது தொடர்பில் விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இலங்கை பயணிகள் உயிரிழந்தமை குறித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.