இதுவரை 441 இலங்கையர்கள் தாதியர்களாக இஸ்ரேலுக்கு பயணம்.

இதுவரை 441 இலங்கையர்கள் தாதியர்களாக இஸ்ரேலுக்கு பயணம்.

இஸ்ரேலில் வீடுகளை அடிப்படையாகக் கொண்ட தாதியர் சேவைக்காக 441 இலங்கையர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சேவையில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள மேலும் 21 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் கடந்த 27 ஆம் திகதி இஸ்ரேலுக்கு பயணமாகினர்.

இதுவரை 441 இலங்கையர்கள் தாதியர்களாக இஸ்ரேலுக்கு பயணம் | Sri Lanka Foreign Employment Agency Vacancies

அதேநேரம் 16 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் அடுத்த மாதம் 2 ஆம் திகதி இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தாதியர் சேவைக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 441 இலங்கையர்கள் இஸ்ரேலிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.