காட்டினுள் இருந்து வயோதிபர் சடலமாக மீட்பு..!

காட்டினுள் இருந்து வயோதிபர் சடலமாக மீட்பு.!

புத்தளம் குருநாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுள் வயோதிபர் ஒருவர் இன்று(30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த நிலையில் 119 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, புத்தளம் காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

காட்டினுள் இருந்து வயோதிபர் சடலமாக மீட்பு | Elderly Dead Body Rescued From Forest Puttalam Sl

பின்னர் குறித்த சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த நீதவான் இந்திக்க தென்னகோன் சடலத்தைப் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம் தம்பபண்ணி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.