போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் மாணவ சமூகம்..!

போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் மாணவ சமூகம்..!

நாட்டில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்ற விடயமானது பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது.

அந்தவகையில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சிறிலங்காவில் சுமார் 50,000 பேர் இருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்காரவே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஏனைய போதைப்பொருட்களுடன் ஒப்பிடும் போது, ​​அதன் பரவல் தற்போது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் மாணவ சமூகம் | Sinister Act Takes Place Secretly School Children 

இவ்வாறான நிலையில் இப்போது பாடசாலை சமூகத்தில் தற்போது புகையிலையின் பாவனை அதிகரித்து காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை சமூகத்தில் குறிப்பாக பதின்ம வயது மாணவர்களிடையே இந்த பழக்கம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. 

அவர்களிடையே அடிக்கடி புகையிலை பாவனையைக் காண முடிகிறது. 

புகையிலையைச் சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் பழக்கம் மாணவர்கள் இடையே தற்காலங்களில் வெகுவாக பரவி வருகிறது.

வீட்டிலேயே அவர்கள் சாதாரணமாக இதனை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புகையிலையால் ஏற்படும் போதைக்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.