காதலியை பார்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு...
பதுளை-மஹியங்கனை பகுதியில் கால்வாயிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை, பதியத்தலாவை 5 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாார்.
குறித்த இளைஞர் தனது காதலியை பார்வையிட, தல்தென பகுதிக்கு நேற்று வருகை தந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதலியின் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ளகால்வாயிலேயே அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.