மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - 07 பெண்கள் உட்பட எண்மர் சிக்கினர்.

மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - 07 பெண்கள் உட்பட எண்மர் சிக்கினர்.

 இரத்மலானையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி மீது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த விபசார விடுதியை நேற்று(31.07) சுற்றிவளைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - 07 பெண்கள் உட்பட எண்மர் சிக்கினர் | Brothel That Operated As A Massage Parlo

சந்தேகத்திற்குரிய விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் 07 பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட குழுவில் பாணந்துறை, பதவிய, நாரம்பனாவ, பரந்த, கெட்டபுலவ, தம்புத்தேகம, வனாத்தவில்லுவ மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 53 வயதுக்குட்பட்ட பெண்கள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - 07 பெண்கள் உட்பட எண்மர் சிக்கினர் | Brothel That Operated As A Massage Parlo

குறித்த பெண்கள் விசாரணைகளுக்காக கல்கிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Gallery