வனப்பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை.

வனப்பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை.

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் இன்று (1) மாலை உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று காணப்படுவதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று காணப்படுவதாக தலவாக்கலை காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தலவாக்கலை காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று கிறேட்வெஸ்டன் மலை பகுதிக்கு சென்றனர்.

அங்கு குறித்த சடலம் அடையாளங் காணப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

வனப்பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை | Death Police Investigating Srilanka

வருடத்தில் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கிறேட்வெஸ்டன் மலை உச்சிக்கு ஏறுவதற்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கிறேட்வெஸ்டன் மலைத்தொடருக்கு ஏறுவதற்காக வந்தவர்களில் ஒருவராக கூட இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சடலம் கிறேட்வெஸ்டன் மலை உச்சிக்கு ஏறிச் செல்லும் வழியில் வனப்பகுதியின் நடுப்பகுதியிலே காணப்படுவதாகவும் 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட பெண்ணொருவரின் சடலமே என தெரிவித்த தலவாக்கலை காவல்துறையினர் இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.