இலங்கையில் மற்றுமோரு பேருந்து விபத்து: ஒருவர் பலி.

இலங்கையில் மற்றுமோரு பேருந்து விபத்து: ஒருவர் பலி.

வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துளார்.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து, எதிர்திசையில் பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற பிரிமோர் ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மற்றுமோரு பேருந்து விபத்து: ஒருவர் பலி | Warakapola Bus Accident Death Police Investigation

விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.