வீதியில் வைத்து காவல்துறை அதிகாரியை அச்சுறுத்திய சாரதி கைது..!
போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெட்டியவத்த - கரகம்பிட்டிய வீதியில் பயணிகள் போக்குவரத்து சேவையை நடத்தும் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (01) ராஜகிரிய பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக குறித்த சாரதி மீது அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த சாரதி காவல்துறை அதிகாரியை வாய்மொழியாக அச்சுறுத்தியது தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்துள்ளது.
இந்நிலையிலேயே, குறித்த சாரதி வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதி இன்று (02) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.