ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள அரச வேலை..!

ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள அரச வேலை..!

அரசியலமைப்பின் பிரகாரம் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுடன் தொடர்புடைய விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற பிரதான பாடங்களுக்கு இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள அரச வேலை | All Set To Recruit 5 450 New Graduates As Teachers

பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர், மாகாண பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு எதிர்காலத்தில் மாகாண அடிப்படையில் செய்யப்பட உள்ளதாகவும், தேசிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாகவும் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அனைத்து தேசிய கல்வி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முன்மொழிவும் கருத்தாக்க அறிக்கை வடிவில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.