கனடாவில் இருந்து வந்த 67 வயது அத்தானுடன் ஓட்டம்பிடித்த யாழ் குடும்ப பெண்!

கனடாவில் இருந்து வந்த 67 வயது அத்தானுடன் ஓட்டம்பிடித்த யாழ் குடும்ப பெண்!

 கனடாவிலிருந்து வந்த 67 வயதான அத்தானுடன் யாழில் உள்ள 56 வயதான பெண் அரச உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண் அரச உத்தியோகத்தர் பென்சனுக்கு விண்ணப்பித்த நிலையில் அத்தானுடன் மாயமானதாக கூறப்படுகின்றது.

67 வயதான நபருக்கு கனடாவில் மனைவி மற்றும் 3 திருமணமான பிள்ளைகள் உள்ளதாகவும், யழ் குடும்ப பெண்ணுக்கும் திருமணமான ஒரு மகளும் திருமணமாகாத நிலையில் ஒரு மகனும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இருந்து வந்த 67 வயது அத்தானுடன் ஓட்டம்பிடித்த யாழ் குடும்ப பெண்! | Canada Tourest Srilanka Sister Escape Akka Husbandகணவர் கொழும்பில் வசிக்கும் திருமணமான மகளுடன் வசித்து வரும் நிலையில் , குறித்த பெண் தனது மகனுடன் வாழ்ந்துள்ளார். இந் நிலையில் கனடாவில் வசித்து வந்த ஒன்றுவிட்ட தமக்கையின் கணவனுடனே குறித்த பெண் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வருட இறுதியிலும் யாழ்ப்பாணம் வந்து மனைவியின் தங்கையின் வீட்டிலேயே அவர் தங்கி சென்றுள்ளார் . இந்த நிலையில் கடந்த மாத இறுதிப் பகுதியில் மீண்டும் வந்த கனடா அத்தானுடன் தனது மகனுக்கும் தெரியப்படுத்தாமல் மாயமாகியுள்ளார்.

கனடாவில் இருந்து வந்த 67 வயது அத்தானுடன் ஓட்டம்பிடித்த யாழ் குடும்ப பெண்! | Canada Tourest Srilanka Sister Escape Akka Husband

தாயை வீட்டில் காணாத மகன் அவருடைய தொலைபேசிக்கு தொடர்பு எடுத்தும் தொலைபேசி இயங்காத காரணத்தால் தனது தந்தைக்கும் சகோதரிக்கும் விடயத்தை தெரியப்படுத்தியதுடன் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

இதன் பின்னர் ஓரிரு நாட்களுக்குப் பின் மகனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்த தாயார், தான் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் பொலிசாரின் முறைப்பாட்டை மீளப்பெறுமாறும் கூறியுள்ளார்.

இந் நிலையில் கனடாவிலிருந்து இலங்கை சென்ற கணவரின் தொடர்பு இல்லாததால் கனடாவாழ் குடும்பமும், தங்கையுடன் கணவர் சென்றதை அறிந்ததாக கூறப்படுகின்றது.