நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு..!

நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு..!

நுவரெலியா - பம்பரக்கலை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றபோது, அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு | Boy Dies Of Wasp Sting In Nuwara Eliya

நுவரெலியா-பம்பரக்கலையை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார் என கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (21.08.2023) நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.