இலங்கையில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

இலங்கையில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

அனுராதபுரம் - கெக்கிராவை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (22-08-2023) பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்! | Anuradhapura Vehicle Accident Two Youth S Death

அநுராதபுரம் - பிரதான வீதியில் பயணித்த லொறியொன்றும் ஹயஸ் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயது இளைஞரும், வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 24 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்! | Anuradhapura Vehicle Accident Two Youth S Deathஹயஸ் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலும், அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.