இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!!

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!!

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (04.09.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ 311.42ல் இருந்து ரூ 312.39 ஆகவும், ரூ 326.05ல் இருந்து ரூ 327.07 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 313.72 ரூபாவிலிருந்து 312.26 ரூபாவாக குறைந்துள்ளதுடன், விற்பனை வீதமும் 326 ரூபாவிலிருந்து 324.50 ரூபாவாக குறைந்துள்ளது.

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி | Dollar Rate Today In Sri Lanka 04 09 2023

இருப்பினும், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ 312ல் இருந்து ரூ 314 ஆகவும், ரூ 323ல் இருந்து ரூ 325 ஆகவும் அதிகரித்துள்ளது.