வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு!!

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு!!

வாகன இறக்குமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை அதிகாரிகள் நேற்று (05) பொது நிதிக் குழுவிடம் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகன இறக்குமதிக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு | Vehicle Import Restrictions

நாடாளுமன்றத்தில்  நேற்று (05) நடைபெற்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான குழு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய போது குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் நீக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.