வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான சரக்குமுனையத்திற்கு வந்த 125 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் அடங்கிய பார்சலை இலங்கை சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமானம் மூலம் நாட்டிற்கு வந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை விமான சரக்கு பிரிவின் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தடுத்து வைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் இருந்து உள்ளூர் சரக்குதாரர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட பார்சலில் சுமார் 2.5 கிலோகிராம் கொக்கெயின் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Customs Seize Cocaine Parcel At Bandaranaike

நேற்று பிற்பகல் பொதியை பெறுவதற்காக விமான நிலையம் வந்தவரை அதிகாரிகள் கைது செய்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு கிராம் கொக்கெய்ன் தற்சமயம் ரூ.50,000 மதிப்புடையது மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.125 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Customs Seize Cocaine Parcel At Bandaranaike

சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.