பிரபல உணவகத்தில் ஆசையாக ரோல்ஸில் வாங்கிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரபல உணவகத்தில் ஆசையாக ரோல்ஸில் வாங்கிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அளுத்கமவில் பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல உணவகத்தில் ஆசையாக ரோல்ஸில் வாங்கிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Plastic Eggs On Rolls At A Sri Lankan Restaurant

முறைப்பாட்டாளர் மற்றொரு நபருடன் அளுத்கம பிரதேசத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்று 1230 ரூபாய்க்கு முட்டை ரோல்ஸ், பணிஸ் , மீன் ரோல்ஸ் போன்ற சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார்.

இதன் போதே கொள்முதல் செய்யப்பட்ட ரோல்ஸில் முட்டை போன்ற வெள்ளை நிற இறப்பர் போன்ற பொருள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உணவகம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.