இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: 30 மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: 30 மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி!

 இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலை மாணவர்கள் பலர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவு விஷமானதன் காரணமாகவே குறித்த பாடசாலை மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: 30 மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! | Ratnapura 30 School Student Admitted Hospital Foodஇதேவேளை, கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.