கந்தளாயில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலி..!

கந்தளாயில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலி..!

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில்வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (20.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தளாய் - வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69 வயது) எனவும் தெரியவருகிறது.

வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கந்தளாயில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலி | Old Men Death Attacked By Elephant In Trinco

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தியவுல்பொத்த என்ற இடத்தில் பொலிஸ் SI ஒருவரும் யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை- பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.