திருகோணமலையில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழப்பு..!

திருகோணமலையில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழப்பு..!

திருகோணமலை சேறுவில காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் சேருவில காவன் திஸ்ஸபுர பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் அதே பகுதியில் வசித்து வரும் குலங்கமுவே கெதர குலரத்ண (56 வயது) என்பவரை உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சேறுவில திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் காவல்துறையினருக்கு கட்டளையிட்டார்.

திருகோணமலையில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழப்பு | Accident Police Investigating Srilanka

இதேவேளை, படுகாயமடைந்த மற்றுமொருவர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சேறுவில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.