வவுனியாவில் பயங்கர விபத்து: தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோக சம்பவம்!

வவுனியாவில் பயங்கர விபத்து: தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோக சம்பவம்!

வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்றையதினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் பயங்கர விபத்து: தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோக சம்பவம்! | Vavuniya Accident Tamils Family Man Death

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தையில் வெதுப்பம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டது.

வவுனியாவில் பயங்கர விபத்து: தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோக சம்பவம்! | Vavuniya Accident Tamils Family Man Death

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற சிவசேகரம் தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.