
டெஸ்ட் தொடரின் வெற்றி யாருக்கு? தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்து- மே.தீவுகள் மோதல்!
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இப்போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேஸன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.