வெளிநாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்..!

வெளிநாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்..!

இலங்கையர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ரவிந்து சங்க டி சில்வா எனப்படும் புரு மூனா என்பவரால் ஹங்வெல்ல - குறுக்கு வீதி பகுதியில் உள்ள கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொலைக்கு தலைமை தாங்கியவர் இவர் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர் | Sri Lankan Arrested In Dubai

இவர் நீண்டகாலமாக உள்ளூர் வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்காரராகவும் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.