நுவரெலியாவில் கட்டடத்தில் இருந்து விழுந்து ஊழியர் மரணம்..!

நுவரெலியாவில் கட்டடத்தில் இருந்து விழுந்து ஊழியர் மரணம்..!

நுவரெலியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (23.09.2023) இரவு அந்தக் கட்டடத்தின் முதலாவது மாடியில் இருந்து ஊழியர் தவறி கீழே விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்ட 59 வயதான சுப்பிரமணியம் வடிவேலு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

accident death

மரண விசாரணைகளின் பின்னர் சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.