கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்..!

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்..!

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் (23.09.2023) பிற்பகல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | Dead Body In Port City Of Colombo

உயிரிழந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் இறுதியாக நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.