அவிசாவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; ஊடகவியலாளர் ஒருவரும் கைது.

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; ஊடகவியலாளர் ஒருவரும் கைது.

அவிசாவளையில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதனுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; ஊடகவியலாளர் ஒருவரும் கைது | Firing In Avisawala Journalist Was Also Arrestedசூடு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தகவல் வழங்கியமை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு முச்சக்கரவண்டி மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்கியமை, உதவி செய்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாகவும் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 21 ஆம் திகதி இரவு கேகாலை பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு முச்சக்கர வண்டியில் பயணித்த குழுவினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.