வைத்தியசாலையின் 6வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவனுக்கு நேர்ந்த சோகம்!
கண்டி - தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையின் 5 வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர், ஐந்தாவது மாடியில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பன்வில - கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.