கொழும்பில் பரவும் தட்டம்மை.
கொழும்பில் தற்போது வரையில் 52 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்களுக்கு சிகிச்சை, மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கொழும்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தட்டம்மை நோயானது தற்போது நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்று எம்மால் உறுதியாகக் கூற முடியாது என்றும் , இது தொடர்பாக நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.