மூன்று வயதுக் குழந்தைக்கு வாயில் சூடு வைத்த தாய்!

மூன்று வயதுக் குழந்தைக்கு வாயில் சூடு வைத்த தாய்!

திவுலபிட்டியவில் தனது மூன்று வயதுக் குழந்தையின் வாயில் தாய் ஒருவர் தீக்குச்சியை பற்றவைத்து எரித்த சம்பவம்  பதறவைத்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில்   குழந்தையின்  தாயார்   கைது செய்யப்பட்டுள்ளதாக  தியுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வயதுக் குழந்தைக்கு வாயில் சூடு வைத்த தாய்! | Mother Lit A Fire Mouth Of A Three Year Old Childஇந்த குழந்தையின் மேல் உதட்டில் தீக்காயங்களின் அடையாளமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவறான வார்தைகளை கூறியதால் நிறுத்தும்படி பயமுறுத்துவதற்காக தீக்குச்சியைக் கொளுத்தி தனது பிள்ளையின் வாயில் நெருக்கமாக வைத்திருந்ததாக சந்தேகநபர் கூறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது குழந்தையின் மேல் உதடு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் 118 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் திவுலப்பிட்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு குழந்தை தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்ததுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , குழந்தையின் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.