பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கையில் இன்றைய தினம் (29-09-2023) ஆரம்பமாகியுள்ள நீண்ட வார விடுமுறையின் போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட வார இறுதியில், பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளில் இணைந்து கொள்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.