திருடனை துரத்திச்சென்றவர் உயிரிழப்பு.

திருடனை துரத்திச்சென்றவர் உயிரிழப்பு.

கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற கட்டிடத்தொழிலாளி ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருடனை துரத்திச்சென்றவர் உயிரிழப்பு | The Person Who Chased The Thief Was Killedகட்டடத் தொழிலாளிகள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்ற போது இரு கட்டிடத் தொழிலாளர்கள் திருடர்களை துரத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இருவரும் 100 மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று இரண்டு திருடர்களையும் பிடித்துள்ளனர்.

இதன்போது திருடர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் குத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்சை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்