வளர்ப்பு நாயைத் தாக்கிய கடை உரிமையாளருக்கு பொலிஸ் உத்தியோகத்தரால் நேர்ந்த சோகம்.
அக்போபுரில் தனது வளர்ப்பு நாயைத்தாக்கிய கடை ஒன்றின் உரிமையாளரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் 67 வயதுடைய கடை உரிமையாளரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தரான சாரதியை சந்தேகத்தின் பேரில் ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தளை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான கடையின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.