யாசகம் பெற்று போதைப்பொருளை வாங்கிய இரு பிள்ளைகளின் தாய்.

யாசகம் பெற்று போதைப்பொருளை வாங்கிய இரு பிள்ளைகளின் தாய்.

ஹொரணையில் பிரதான வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு முன்பாக குழந்தையுடன் யாசகம் பெரும் சம்பவம் இடம் பெற்று வந்துள்ளது.

அத்தோடு அதனூடாக கிடைக்கும் பணத்தில் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் பண பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு வரும் நபர்களிடம் பணம் வசூலித்து போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாசகம் பெற்று போதைப்பொருளை வாங்கிய இரு பிள்ளைகளின் தாய் | Mother Of Two Child Yasakam And Bought Drugsகைதானவர் பொல்கஸ்ஓவிட்ட பஹலமாகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 25 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பெண் பத்து மாதங்களுக்கு முன்னர் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள அழகூட்டல் நிலையமொன்றில் பணி புரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பணிபுரியும் காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.