மஹியங்கன பெரஹெர யானையை சுட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

மஹியங்கன பெரஹெர யானையை சுட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

வருடாந்த எசல பெரஹெரவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வனவிலங்கு அதிகாரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சீதா என்ற யானையை காட்டு யானை என நினைத்து மாபகடவெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.மஹியங்கன பெரஹெர யானையை சுட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு! | Officer Shot Perahera Elephant Released On Bailஇந்த துப்பாக்கிச் சூடு இன்றைய தினம் (30-09-2023) அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபரை மஹியங்கனை பதில் நீதவான் எஸ். கோவிந்த முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபரை 1 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

மஹியங்கன பெரஹெர யானையை சுட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு! | Officer Shot Perahera Elephant Released On Bail

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயத்திற்கு உள்ளான சீதா என்ற 47 வயது யானைக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.