வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழப்பு.

வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழப்பு.

வெலிப்பன்னவில் வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 34 வயதுடைய ராஜ்பாய் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழப்பு | Indian Died After Falling Into A Hot Water Boilerஉயிரிழந்த நபர் மீகம தர்கா நகரப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது சுடுநீர் கொதிகலனுக்குள் விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.