வெளிநாடு சென்ற மனைவிக்காக உயிரை மாய்த்த இளைஞன்.

வெளிநாடு சென்ற மனைவிக்காக உயிரை மாய்த்த இளைஞன்.

தலாத்துஓயாவில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலாத்துஓயா - மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 30 வயதான இளைஞனின் சடலம் தனியார் காணியில் உள்ள முள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்ற மனைவிக்காக உயிரை மாய்த்த இளைஞன் | Young Man Who Died For His Wife Went Abroadநிரந்தர தொழில் இல்லாத ருவன் சந்தகுமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவ் இளைஞனுக்கு திருமணமாகியுள்ள நிலையில் மனைவி வெளிநாட்டில் பணிக்காக சென்றுள்ளார்.

மனைவி இல்லாமல் மனவேதனையில் இருந்த அவர் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரேதப பரிசோதனை கண்டி பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக தெரிவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.