கிழக்குப் பல்கலைக்கழகம் மக்களின் பார்வைக்கு.

கிழக்குப் பல்கலைக்கழகம் மக்களின் பார்வைக்கு.

இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது வருடத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகளுடன் கூடிய பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரம், பல்கலைக்கழக சபா மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகம் மக்களின் பார்வைக்கு | University Of The East For Public View

இப்பல்கலைக்கழக வாரத்தை விசேடமாகக் கொண்டாடும் நோக்கில் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக பிராந்தியத்திலுள்ள சமூகத்தினருக்காக எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையினை திறந்த நாளாக நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.