இலங்கையில் பயங்கர சம்பவம்: 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் வைத்தியசாலையில்!

இலங்கையில் பயங்கர சம்பவம்: 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் வைத்தியசாலையில்!

பேருவளையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் மரக்கலவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் பயங்கர சம்பவம்: 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் வைத்தியசாலையில்! | Auto Collided With Train Beruwala Children Injury

அநுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கிச் பயணித்துக்கொண்டிருந்த ரயிலில், முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 02 சிறுவர்கள் உட்பட 04 பேரும் சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.