இலங்கை ரூபாவின் பெறுமதியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள மாற்றம்!
இந்தாண்டில் (06-10-2023) நேற்று வரையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 25.7 வீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு நிகராக 10.9 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த காலப்பகுதியில் யூரோவுக்கு நிகராக 13.4 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 12.8 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.