வெளிநாட்டில் இலங்கைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை; வெளியான அதிர்ச்சித் தகவல்.

வெளிநாட்டில் இலங்கைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை; வெளியான அதிர்ச்சித் தகவல்.

 சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவரை, அவர் வேலை செய்த வீட்டின் எஜமானரும் எஜமானியும் இணைந்து உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கொத்தடுவ புதிய நகரைச் சேர்ந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்தச் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

வெளிநாட்டில் இலங்கைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை; வெளியான அதிர்ச்சித் தகவல் | Cruelty To A Sri Lankan Woman Abroad Shocking Newsசுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் சவூதி பொலிஸாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சுமார் ஒன்றரை மாதங்களாக தடுப்பு முகாமில் வாழ்ந்து வருவதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.